கல்பனா சாவ்லா அரசு மருத்துவக் கல்லூரி
குறிக்கோளுரை | सर्वे भवन्तु सुखिनःஅனைவரும் மகிழ்ச்சியுடன் வாழட்டும் । सर्वे सन्तु निरामयाः அனைவருக்கும் அமைதி நிலவட்டும் |
---|---|
வகை | பொது மருத்துவமனை |
உருவாக்கம் | 2017 |
சார்பு | பண்டிட் பகவத் தயால் சர்மா, சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் |
நிதிக் கொடை | ஓராண்டுக்கு ₹11.24 பில்லியன் (US$140 மில்லியன்) |
நிதிநிலை | ரூ 645.77 கோடி |
தலைவர் | சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம், அரியானா அரசு |
பணிப்பாளர் | மருத்துவர் ஜே. சி. துரேஜா |
அமைவிடம் | கர்னால், இந்தியா |
சேர்ப்பு | இந்திய மருத்துவக் கழகம் |
இணையதளம் | www |
கல்பனா சாவ்லா அரசு மருத்துவக் கல்லூரி (Kalpana Chawla Government Medical College) இந்திய மாநிலமான அரியானாவின் கர்னால் நகரில் செயல்பட்டு வரும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகும்.[1][2]
வரலாறு
[தொகு]இதன் கட்டுமானம் 2013இன் பிற்பகுதியில் தொடங்கி, முடிவடைந்து, வெளிநோயாளிகளின் பிரிவையும், மருத்துவமனையையும் கொண்டு முழு அளவில் செயல்படுகிறது.
அங்கீகாரம்
[தொகு]இந்த மருத்துவக் கல்லூரி அரியானாவின் ரோத்தக், பண்டிட் பகவத் தயால் சர்மா, சுகாதார அறிவியல் பல்கலைக்கழக இணைவு பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 120 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மருத்துவமனை
[தொகு]இந்த மருத்துவக் கல்லூரி, கர்னல் அரசு மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும். கற்பித்தலுக்கான மருத்துவமனையாக செயல்படுகிறது. விண்வெளி வீரர் கல்பனா சாவ்லாவின் நினைவாக அரியானா அரசு கல்லூரிக்கு இவரது பெயரிட்டது.
கோவிட் மையம்
[தொகு]கோவிட் தொற்றுநோயால் லேசான மற்றும் மிதமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை மையமாகவும், மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்காகவும் அரியான அரசு இந்த மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுத்துள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Three committees constituted for monitoring works relating to Kalpana Chawla university". Uniindia.com. பார்க்கப்பட்ட நாள் 18 November 2017.
- ↑ "அமெரிக்காவின் ஒபாமா கேரும், இந்தியாவின் மோதி கேரும்". BBC News தமிழ். பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.
- ↑ "Covid care only at Karnal's Kalpana Chawla hospital". பார்க்கப்பட்ட நாள் 2021-06-29.